ஆவடி சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி ஜேஎம் 1வது கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சியங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சரத்பாபு வாதிட்டார். விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் எதிரி ஏழுமலைக்கு 3 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6,34,000- வழங்க வேண்டும் என்று நீதிபதி ஸ்டாலின் தீர்ப்பு அளித்தார்.