சென்னை நகரில் 15 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

சென்னை நகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 27.09.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 290 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 73 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 51 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 3 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 427 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களில் சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 21.09.2023 முதல் 27.09.2023 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் ஓட்டேரி பிரபாகரன் (எ) சரண்ராஜ், 35, வெங்கடேசன், 24, ஆகிய இருவரும் கொலைமுயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஓட்டேரி காவல் நிலையத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. , ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் பிராட்வேயைச் சேர்ந்த மணிகண்டன், 30 மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்திலும், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளங்கோ, 25, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும், பெரம்பூர் மணவாளன் 31 மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்திலும் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த இளவரசன், 30 என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இவர்கள் உட்பட மொத்தம் 15 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment