ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி காவல் நிலைய எலலைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் வந்தது.
அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்த போது அதில் Nitravet-10 mg என்னும் போதை மாத்திரைகள் ஒரு அட்டைக்கு 30 மாத்திரைகள் வீதம் மொத்தம் 124 அட்டைகள் இருந்தது. அவற்றை அவர்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. ஜாலியான வாழ்க்கைக்கு பணம் அதிகாமாக தேவைப்பட்டதால் போதை மாத்திரை விற்பனை மூலமாக அதிக பணம் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் நைட்ராவட் போதை மாத்திரையை ஐதராபாத்திலிருந்து கள்ளத்தனமாக வாங்கி வந்து அவற்றை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். ஒரு அட்டைக்கு 30 மாத்திரைகள் விதம் 124 அட்டைகளில் இருந்த 3,720 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 4 பேரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவில் அடைக்கப்பட்டடனர். போதை மாத்திரைகளை விற்பனை செய்த எதிரிகளை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.