சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் அருண் வெ ள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தலைமைக் கட்டுப்பாட்டறையும் துவங்கப்பட்டு, ஒருங்கிணைந்து, தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றும் இன்றும் பெய்த மழையின் காரணமாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழைநீர் பெருக்கு காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களிலும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டதையும், சென்னை பெருநகர காவல் துறையினர் மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து போர்க்கால அடிப்படையில், உடனுக்குடன் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தும், மழைநீர் தேங்கிய இடங்களில் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் வடியவும் பெரிதும் பங்காற்றி வருகின்றனர்.
12 காவல் மாவட்டங்களிலும் உள்ள 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகள், காவல் மாவட்ட அலுவலகங்களில் செயல்பட்டு வந்த 12 சிறப்பு கட்டுப்பாட்டறைகளிலும், காவல் ஆணையரகத்தில் செயல்பட்டு வருகின்ற தலைமை கட்டுப்பாட்டறையிலும், மொத்தமாக சேர்த்து மழைநீர் தேங்கியது தொடர்பான 102 அழைப்புகள் பெறப்பட்டது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வடிய தக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மரங்கள் விழுந்தது தொடர்பாக 8 அழைப்புகள் பெறப்பட்டது. அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு, போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்பட்டது.
வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ராமாபுரம், ராயலா நகர் 3வது தெருவில் 85 வயது மூதாட்டியின் வீட்டினுள் மழைநீர் புகுந்ததை தொடர்ந்து, அவரையும், அவரது மகனையும் பத்திரமாக மீட்டு நிவாரண மையத்தில் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தனர். சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் காவலர் குடியிருப்புகளில் ஆய்வு செய்தார் மாநகர காவல் ஆணையர் அருண்
புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பு, ராயப்பேட்டை காவலர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்