300 குடும்பங்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வெள்ள நிவாரணம்

ஆழ்வார்திருநகரியில் 300 குடும்பங்களுக்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி பகுதியில் தூத்துக்குடி ஜமாத்துல் உலமா சபை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மவுலவி எஸ். முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி, தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவுலவி எம். இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக

ஆழ்வார் திருநகரி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் மக்களுக்கு 10 கிலோ அரிசி, பிஸ்கட், சேமியா மற்றும் மளிகை சாமான் தொகுப்புகள் 300, போர்வை, துண்டு, கைலி ஆகியவைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் பைஜி இவற்றை வழங்கினார். ஆழ்வார்திருநகரி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமீது அப்பாஸ், செயலாளர் லாபிர், பொருளாளர் ஹமீது சுல்தான் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் முஹம்மது யாகூப் பாகவி, என். அப்துல் அஹத் காஷிபி, எஸ். நிஜாமுத்தீன் ரஹ்மானி ஆகியோர் முன்னிலையில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டன. வெள்ள நிவாரணம் வழங்கிய ஜமாத்துல் உலமா சபைக்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத்தாரும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்

Comments (0)
Add Comment