வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ. 54 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முன்பணமாக தொகையை பெற்றுக் கொண்ட முகமது ஜாகிர் உசேன் அரிசியை ஏற்றுமதி செய்யாமல் பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளார். வாரிசியை ஏற்றுமதி செய்ய சொல்லி பேசிய போது சாகுல் அமீதை, ஜாகிர் உசேன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே வங்கி பணபரிவத்தனை மூலமாக ரூ. 54,99,300 பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய முகமது ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி சாகுல் அமீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் நிஷா தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாகிர் உசேன் பணமோசடி செய்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் சென்னை துரைப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த முகமது ஜாகீர் உசேன் (வயது 33) என்பவரை 07.10.2023 அன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கார், Laptop1, கைபேசி -11, சீல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஜாகிர் உசேன் இது போன்று பலரை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இவ்வழக்கில் வேறு யாராவது சம்மந்தப் பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.