மஜ்லிஸுல் மஹ்ரலரியின் (பேரவை) நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

தூத்­துக்­குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரியா அரபிக்கல்லூரியில் கற்றுத் தேர்ந்த ஆலிம்களின் பொதுக்குழு சங்கமம் நெல்லை, மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசலில் கடந்த 19ம் தேதி­யன்று காலை 9.30 மணி­ய­ளவில் நடந்­தது. இந்த நிகழ்ச்­சியில் மஜ்லிஸுல் மஹ்லரியீன் பேரவை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்­பட்­டனர்.

காயல்­பட்­டினம், அஸ்கருர் ரஹ்மான் பெண்கள் அரபிக் கல்லூரியின் நிறு­வனர் அல்ஹாபிழ் அஹ்மத் அப்துல் காதர் மஹ்லரி தலைமையில் நடந்த இந்­நி­க­ழ்ச்­சியில் மவு­லவி அல்ஹாபிழ் அம்ஜத் பர்வேஸ் மஹ்­லரி கிராஅத் ஓதினார். மஹ்­லரி ஆலிம்கள் அனைவரும் சங்­­கை­மி­கு அஹ்மதுல்லா பைத்தை ஓதினர்.

தலைவரின் தலைமை உரைக்குபின் மவு­லவி அப்லலுல் உலமா J.M. ஜெய்னுல் ஆபிதீன் மஹ்லரி ஹலரத் வரவேற்புரை நிகழ்த்தினார். அல்ஹாஜ் மவு­லவி அபு மன்சூர் ஆலிம் மஹ்லரி ஹலரத் (தலைமை இமாம் முஹையதீன் பள்ளிவாசல் காயல்பட்டினம்) ஆண்டறிக்கை வாசித்தார். அட்டஹாக் கமிட்டி தலைவர் அல்ஹாபிழ் M.G. ஷிஹாபுதீன் மஹ்லரி ஹலரத் துவக்க உரை நிகழ்த்தினார்.

பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த மஹ்லரி ஆலிம்களால் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரியா அரபி கல்லூரியின் முதல்வர் மவு­லவி அல்ஹாபிழ் S. ஸெய்யது அப்துர்ரஹ்மான் பாக்கவி பாழில் அஹ்ஸனி தங்கள் மற்றும் மஹ்லரத்துல் காதிரியா அரபி கல்லூரியின் துணை முதல்வர் மவு­லவி முஹம்மத் அஸ்பர் அஷ்ரபி ஹலரத் ஆகியோர் பேரவையின் கவு­ரவ ஆலோசகர்களாகவும், தலைவராக சேலம் முஹம்மத் புரா பெரியவாசல் தலைமை இமாம் மவுலவி அல்ஹாபிழ் M.G. ஷிஹாபுதீன் மஹ்லரி தேர்­ந்­தெ­டுக்­கப்­பட்­டனர்.

துணைத் தலைவர்களாக S.P.பட்டிணம் ஜாமிஆ அன்வாருல் குத்ஸியா அரபிக்கல்லூரி துணைமுதல்வர் மவுலவி அப்ழலுல் உலமா J.M. ஜெய்னுல் ஆபிதீன் மஹ்லரி ஹலரத் மற்றும் மௌலவி P.M. முஹம்மத் ஷாஹ் மஹ்லரி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­­டனர். செயலாளராக மௌலவி K.M. ஷேக் முஹம்மது (குல்லாஆலிம்) மஹ்லரி, துணை செயலாளர்களாக ஜாமிஆ அஸீஸியா அரபிக் கல்லூரி முதல்வர் & சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அல்ஹாஜ் மவுலவி ஆலே ரஸூல் டாக்டர் ஸெய்யது கரீம்அலிஷா மற்றும் மவு­லவி S. முஹம்மத் யூசுப், பொருளாளராக மஹ்லரத்துல் காதிரியா அரபி கல்லூரியின் ஹிப்ழ் ஆசிரியர் மவு­லவி அல்ஹாபிழ் ஸுல்பிகர் மஹ்லரி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இறு­தியில் ஷேக் முஹம்மது (குல்லாஆலிம்) மஹ்லரி நன்றியுரை ஆற்றினார். மஹ்லரத்துல் காதிரியா அரபி கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் மவுலவி அல்ஹாபிழ் S. ஸெய்யது அப்துர் ரஹ்மான் பாக்கவி பாழில் அஹ்ஸனி தங்கள் துஆ ஓதினார். லுஹர் தொழுகைக்குப் பின்னர் மதியம் விருந்துடன் கூட்டம் இனிதே நடை பெற்றது.

Comments (0)
Add Comment