சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பல்வேறு பகுதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், Drive Against Drug (DAD) என்ற பெயரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், போதைப்பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் 08.08.2023 முதல் 13.08.2023 வரை போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று (08.08.2023) சென்னை பெருநகர காவல், 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
திருவல்லிக்கேணி காவல் மாவட்டம்
சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையாளர், காவல் அதிகாரிகள், மற்றும் ஆளிநர்கள் இன்று (09.08.023) காலை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், சென்னை பெருநகர காவல் துறை சார்பாக ”போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சுமார் 250 மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இம்முகாமில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.
கீழ்பாக்கம் காவல் மாவட்டம்
சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கோபி தலைமையில் கீழ்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் துரை, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இன்று (09.08.2023) காலை ஹாரிங்டன் சாலையில் உள்ள MCC பள்ளியில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 270 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இம்முகாமில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.
அயனாவரம் சரக காவல் உதவி ஆணையாளர் முத்துக்குமார் தலைமையில் காவல் அதிகாரிகள் இன்று (09.08.2023) காலை, அயனாவரம் வீராசாமி தெருவில் உள்ள பெத்தேல் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் நம்மாள்வார் பேட்டையில் உள்ள தங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், பேரணி, மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் 600 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளர் கண்ணன் மேற்பார்வையில் வேப்பேரி காவல் ஆய்வாளர் ராஜு தலைமையில் இன்று (09.08.2023) காலை, கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் துவங்கி, அழகப்பா தெருவழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சிகளில் 200 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கோயம்பேடு காவல் மாவட்டம்
சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் திரு.மனோகரன், கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர் உமையாள் மற்றும் காவல் அதிகாரிகள் இன்று (09.08.2023) கோயம்பேடு பகுதியில் நடந்த போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்,கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர் உமையாள் தலைமையில் இன்று (09.08.2023) காலை மதுரவாயல் பகுதியில் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் 200 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
புளியந்தோப்பு காவல் மாவட்டம்
புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஈஸ்வரன் இன்று (09.08.2023) காலை புளியந்தோப்பு பகுதியில் லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நடந்த போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் 1000 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
அடையார் காவல் மாவட்டம்.
அடையார் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் இன்று (09.08.2023) காலை அடையார் பேட்ரிசியன் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் 500 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் போதை விழிப்புணர்வு குறித்து பலூன் பறக்கவிடப்பட்டது.