தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 19.1.2025 அன்று மாலை சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளையின் சர்வதேச தலைவர் முனைவர் எஸ் எம் ரஷ்மி ரூமி தலைமையில் ஐரோப்பா பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து சாதனையாளர்களுக்கு கௌரவம் முனைவர் பட்டம் மற்றும் சிறந்த சாதனையாளர்கள் விருது வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் சாதிக் மற்றும் வடகரை முன்னாள் சேர்மன் ஜனாப் சரிப் மற்றும் தென்காசி ஒன்றிய யூனியன் தலைவர் ஜனாப் ஷேக் அப்துல்லா மற்றும் வல்லம் ஒன்றிய செயலாளர் ஜனாப் திவான் ஒலி மற்றும் முன்னாள் வேளாண்மை அதிகாரி அக்ரி ஷேக் மொகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும் ஐஎன்டியுசி யின் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் அமீர்கான் மற்றும் சர்வதேச சாதனையாளர் அறக்கட்டளையின் சர்வதேச பொதுச் செயலாளர் மின்னல் பாதுஷா அமைப்பின் சர்வதேச துணைத் தலைவர் டாக்டர் சேக் மன்சூர் மற்றும் சங்கநாத இணைய வானொலியின் ஆலோசகர் செக்கடி ஹமீது மற்றும் மனித விழிப்புணர்வு ஆசிரியர் ஆர் பாண்டியன்மற்றும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் நிர்வாகிகள் நெல்லை ஜபருல்லா டாக்டர் பாத்திமா பொருளை மைந்தன் காஜாமுகைதீன் ஹமீதா ரஹ்மான் பக்கீர் முஹைதீன் போன்றவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.