கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த 15 போலீஸ் அதி­கா­­ரிகள், ஆளி­நர்­க­ளுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் பாராட்­டு

தமி­­ழ­கத்தின் வடக்கு மண்­ட­ல­மான விழுப்­புரம் டிஐஜி சரகத்­துக்­குட்­பட்ட கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­க­ளுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் நற்­சான்­றி­தழ்கள் வழங்கி பாராட்­டி­னார்.

தமி­ழக டிஜிபி சங்கர்­ஜிவால் தலைமையில் விழுப்புரம் காவல் சரகம் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் 20.12.2024 மற்றும் 21.12.2024 ஆம் தேதிகளில் நடைபெற்றது. குற்றங்களைக் கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்கத்தில் முன்மாதிரியான செயல்திறனைப் பாராட்டி, விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்­கர்­­ஜிவால் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெச்சத் தகுந்த பணிகளை செய்த திருக்கோவிலூர் சப்­டி­விஷன் பார்த்திபன், இன்ஸ்­பெக்டர் விநாயகமுருகன், உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், பிரபாகரன், லோகேஸ்வரன், மணிபாரதி, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல் ஆளிநர்கள் மணிகண்ட பெருமாள், அசோக் குமார், சிவபாலன், விக்ரம் வாசு ராமதாஸ், பிரபாகரன், சுரேஷ், பிரபு உள்­பட 15 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் மெச்சதகுந்த பணிகளை பாராட்டி நற் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்­சியின் போது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி, கடலூர் எஸ்பி ராஜாராம், விழுப்புரம் எஸ்பி தீபக் ஸ்வாச் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

Comments (0)
Add Comment