பொது­மக்­கள் குறை தீர் முகாமில் 64 மனுக்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் சங்கர் உத்­த­ர­வு

ஆவடி காவல் ஆணைரயகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகா­மில் 64 புகார் மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் சங்கர் உத்­த­ர­விட்­டார்.

இன்று 02.07.2025ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போலீஸ் கமி­ஷனர் சங்கர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கமி­ஷனர் சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 64 புகார் மனுக்களை உரிய அதிகாரிகள் மூலமாக உடனடியாக தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இந்த குறைதீர்ப்பு முகாமில் ஆவடி துணைக்­க­மி­ஷனர் அய்மன் ஜமால் மற்றும் காவல் அதி­கா­ரிகள் கலந்துக்கொண்டனர்.

மேலும் இதற்கு முன்பாக பெறப்பட்டு விசாரணை முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது மேற்கொண்ட விசாரணை குறித்து மனுதாரர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, சரியான தீர்வு காணப்படாத மனுக்கள் மீதும், மறுவிசாரணை செய்ய கோரிய புகார் மனுக்களின் மீதும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மேல் விசாரணை மேற்கொள்ள கமி­ஷனர் சங்கர் உத்­த­ர­விட்­டார்.

 

Comments (0)
Add Comment