சென்னை நகரில் சிறப்பாக காவல் பணியாற்றிய 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
பூக்கடை சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தினசரி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலையிலான காவல் குழுவினர் வீட்டை காலி செய்ய ஆயுதங்களுடன் அடியாட்களை கொண்டு மிரட்டிய 6 குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பான காவல் பணிபுரிந்துள்ளனர். மேலும் K-11 CMBT காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், K-10 கோயம்பேடு காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தும், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கள்ள நோட்டுகள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்தும், E-1 மயிலாப்பூர் காவல் நிலைய காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளியை கைது செய்தும், R-6 குமரன் நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
ராமாபுரம் காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், R-1 மாம்பலம் போக்குவரத்து காவல் நிலைய காவல் குழுவினர் கீழே கிடந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்தும், ராமாபுரம் காவல் நிலைய காவலர்கள் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு), கபில்குமார் சி.சரட்கர், (தலைமையிடம்), ஆர்.சுதாகர், (போக்குவரத்து), அஸ்ரா கார்க், (வடக்கு), மகேஸ்வரி, (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.