சிறந்த காவல் பணியாற்­றிய 29 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளுக்கு கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணி­யாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமி­ஷ­னர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சூளை­­­மேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்­பல்

போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU) தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் போதைப்பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, 260 கிராம், OG கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில், 8 MDMA மாத்திரைகள், 6 செல்போன்கள், பணம் ரூ.2.65 லட்சம் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டுள்­ள­ன.

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU), காவல்குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ANIU ஆய்வாளர் ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைக்காவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின்குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் மற்றும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்கள் ஒருங்கிணைந்து கடந்த 05.10.2025 சூளைமேடு, கமலா நேரு நகர் பகுதியில் கண்காணித்து OG கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்திய பள்ளிக்கரணை பிரதாப், ஜனார்த்தனன், , பூர்ணசந்திரன், அப்துல் வாசிம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 260 கிராம் OG கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில், 1.5 கிலோ கஞ்சா, 8 MDMA மாத்திரைகள், பணம் ரூ.2.65 லட்சம், 6 செல்போன்கள், 5 எடை மெஷின்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அடை­யாறு மது­வி­லக்கு அம­லாக்­கப்­பி­ரிவு போலீ­சாரின் நட­வ­டிக்­கை

அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்குழுவினர் ஆய்­வாளர் மீனாட்சி சுந்தரம், உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், மாதவன், தலைமைக்காவலர்கள் சதீஷ்குமார், பிரபாகரன், மாரிமுத்து அடங்கிய காவல் குழுவினர்கள் கடந்த 08.09.2025 அன்று, கிண்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஜெபஸ்டின், இசக்கிராஜா, தளவாய்மதன், இசக்கிமுத்து ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா, இன்னோவா கிறிஸ்டா கார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்­தனர்.

Serious Crime Squad நட­வ­டிக்­கை

Serious Crime Squad காவல்குழுவினர் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைவழக்கில் தொடர்புடைய எதிரி யாதவ வீரா (எ) ஜானகிராமன் என்பவரை கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 பட்டா கத்தி ஆகி­ய­வற்றை பறிமுதல் செய்­த­னர்.

சென்னை பெருநகர காவல், Serious Crime Squad உதவி ஆணையாளர் தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் நிர்மல்குமார், ரமேஷ்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முகமது யஹியா, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவபாலகுமார், தலைமைக்காவலர்கள் சந்திரசேகரன், சிவகுமார், வேதகுப்புராஜ் அடங்கிய காவல்குழுவினர் மற்றும் ஓட்டேரி காவல் நிலைய காவல் குழுவினர் ஒருங்கிணைந்து 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்­ற­வாளி யாதவ வீரா (எ) ஜானகிராமன், (38), என்பவரை கடந்த 14.09.2025 அன்று கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவர் மீது 19க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

ரவு­டியை கைது செய்த எழும்பூர் போலீஸ்

சென்னை எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் கட்டுப்பாட்டறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக்காவலர் வினோத்ராஜ் ஆகியோர் அந்த பகு­தியில் கத்­தி­­யுடன் சுற்­றித்­தி­ரிந்த ரவு­டிகள் விமல்ராஜ் (எ) கபாலி, பிரகாஷ் ஆகிய 2 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி பிரகாஷ் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

9 ஆண்டு தலை­ம­றை­வாக இருந்த கொலை­யா­ளியை கைது செய்த புழல் போலீசார்

சென்னை பெருநகர காவல் புழல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் எமரோஸ், தலைமைக் காவலர் சிவகுமார், முதல் நிலைக்காவலர் யுவராஜ், காவலர் சிவராமன் அடங்கிய காவல்குழுவினர் ல் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான மோகனசுந்தரம் (எ) சிட்டாள் என்பவரை கடந்த 16.09.2025 அன்று கைது செய்தனர்.

ஹரியானா போலீஸ் அகாடமியில் ஆணழகன் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற தலைமைக்காவலர்கள்

கடந்த 23.09.2025 அன்று ஹரியானா மாநிலம், போலீஸ் அகாடமியில் நடைபெற்ற 74வது அனைத்து இந்திய விளையாட்டு போட்டியின் ஆணழகன் போட்டியில், சென்னை பெருநகர காவல், சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் புருஷோத்தமன், என்பவர் 85 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், ஆயுதப்படை, தலைமைக் காவலர் செல்வகுமார் 65 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்று, சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வகையில் சூளைமேடு பகுதியில் போதைப்பொருட்கள் வைத்திருந்த 4 நபர்களை கைது செய்த ANIU காவல்குழுவினர், 25 கிலோ கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்த அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்குழுவினர், 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைவழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்த Serious Crime Squad காவல்குழுவினர், எழும்பூர் பகுதியில் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி, கத்தியுடன் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்களை கைது செய்த காவல்குழுவினர், புழல் காவல் நிலைய கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த காவல்குழுவினர், 74வது அனைத்து இந்திய விளையாட்டு போட்டியின் ஆணழகன் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற இரண்டு தலைமைக்காவலர்கள்ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் இன்று (07.10.2025) நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Comments (0)
Add Comment