43 ஆவது அகில இந்­திய குதி­ரை­யேற்றப் போட்­டியில் வெற்றிப் பெற்­ற­வர்க­ளுக்கு கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அரு­ண் 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை நகர காவல் குதிரைப்படையினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 10.03.2025 முதல் 25.03.2025 வரை ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை அடிப்படை பயிற்சி மையத்தில், 43வது அகில இந்திய காவல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டிகள் (43rd All India Equestrian Championship and Mounted Police Duty Meet) நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை காவல்துறை சார்பாக 1 உதவி காவல் கண்காணிப்பாளர், 1 உதவி காவல் ஆணையாளர், 9 ஆண் குதிரையேற்ற வீரர்கள் மற்றும் 1 பெண் குதிரையேற்ற வீராங்கனை ஆகியோர் பங்கேற்றனர்.


இப்போட்டியில் தமிழக காவல்துறை அணியின் உதவி காவல் கண்காணிப்பாளர் ஷுபம் நாகர்கோஜ் officers Hacks பிரிவில் வெள்ளி பதக்கமும், உதவி ஆணையாளர் அஜய் தங்கம், Officers Hacks பிரிவில் வெண்கலப் பதக்கமும், முதல்நிலை பெண் காவலர் செல்வி சுகன்யா Women Dressage பிரிவில் 1 தங்கப்பதக்கம் மற்றும் Women’s Hacks 1 வெள்ளி பதக்கம் என 2 பதக்கங்களும் பெற்­றனர்.

மேலும் முதல்நிலை காவலர் மணிகண்டன் Preliminary Show Jump பிரிவில் 4வது இடமும், குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் குதிரை பராமரிப்பாளர் தேர்வில் வெள்ளி பதக்கமும் பெற்று தமிழக காவல்துறை மற்றும் சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இன்று (04.04.2025) காலை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் கமி­ஷனர் அருண் மேற்கண்ட 43வது அகில இந்தி காவல் குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்த காவலர்கள் சுகன்யா, மணிகண்டன் மற்றும் குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி, போட்டியில் வென்ற குதிரைகளையும் பார்வையிட்டார். மேலும், போட்டியில் வென்ற குதிரைகளின் சாகசங்களை கண்டு ரசித்து பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் சி சரட்கர், (தலைமையிடம்), டாக்டர் கண்ணன், (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), ராதிகா, (மத்தியகுற்றப்பிரிவு) காவல் இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) விஜயகுமார், துணை ஆணையாளர்கள் ஜரினா பேகம், (கீழ்பாக்கம்), கீதாஞ்சலி, ( மத்திய குற்றப்பிரிவு-2) சுப்புலட்சுமி ( நிர்வாகம்), அன்வர்பாஷா, (ஆயுதப்படை-2) காவல் அதிகாரிகள் மற்றும் குதிரைப்படையினர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment