19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. கோவை மாநகரில் காவல் துறையினருக்காக தபால் வாக்குப்பதிவு மையத்தில், கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.