லோன் மோசடி கும்பலை டில்லியில் வளைத்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் சிறுக சிறுக ரூபாய் 2,43,650 -பணத்தை குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் லோன் மோசடி நபர்களிடம் கொடுத்து ஏமாந்து போனதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் மனு அளித்தார்.

அது தொடர்பாக தென் சென்னை சைபர்கிரைம் போலீசார் ஆள்மாறாட்டம், மோசடி, இணைய வழியில் ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கும்பல் டில்லியில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் டில்லி விரைந்து சென்று ரகுபீர் நகரில் தங்கியிருந்து நோட்டமிட்டனர்.

BLUK SMS அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன் (29), துரைமுருகன் (24), ராஜேஷ் (33) ஆகிய 3 நபர்களை கடந்த 20ம் தேதியன்று புதுடில்லியில் வைத்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், காசோலை புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பணம் ரூ. 1,50,000- ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தி 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

3 பேரும் டெல்லியில் தங்கி இருந்து கொண்டு குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் லோன் தருவதாக BLUK SMS அனுப்பி அவர்களை தொடர்பு கொள்ளும் நபர்களை ஆசை வார்த்தைகள் காட்டி நம்ப வைத்து பல்வேறு காரணங்களை கூறி சிறுக சிறுக பணம் பின்பு கட்டச் சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றியது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது.

எனவே குறுஞ்செய்திகள் மூலம் வரும் தகவல்களை உண்மை என நம்பி மக்கள் தங்களது பணத்தை யாருக்கும் அனுப்பக்கூடாது. நேரில் பார்க்காமலும் விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment