பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜ.க. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க -மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சு தோல்வியில் முடிந்துவிட்டதால் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் தனித்துபோட்டி என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கும் பா.ஜ.க முயற்சி தோல்வியில் முடிந்தது. மராட்டியத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் கட்சிகளுடன் பாஜக நடத்தி வரும் பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வியில் முடிவதால் அக்கட்சி மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது.

Comments (0)
Add Comment