சாக்குமூட்டையில் பீகார் இளைஞர் உடல்: மனைவி, குழந்தையைக் கொன்று வீசிய­தாக கைதா­ன­வர்கள் பர­ப­ரப்பு வாக்­கு­மூ­லம்

கடந்த 26.01.2026  அன்று சென்னை அடையார், இந்திரா நகர், 1 ஆவது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்­த­ப­டி ­ கி­டந்­தது. அதனைக் கண்டு அதிர்ச்சியந்த அந்த பகுதி மக்­கள் உடனே அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை­யுண்டு கிடப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் கொலையுண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை ந­கர போலீஸ் கமி­­­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் கூடுதல் கமி­ஷனர் நரேந்­திரன் நாயர் மேற்­பார்­வையில் அடை­யாறு துணைக்­க­மி­ஷனர் (பொறுப்பு) ஹரி­கிரன் பிரசாத் தலை­மை­யில் ஐந்து தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டன. சம்­ப­வயிடத்­தைச் சுற்­றி­யி­ருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்­போது இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்­கினர்.

மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலையான இளைஞர் பெயர் கவுரவ் குமார் (24) என்பதும் இவர் தன் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை அப்படி தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து விசாரணையில் தெரியவந்துள்ளது. கௌரவ் குமார் நெருங்கிய நண்பர் உள்பட 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை­ய­டுத்து மனைவி மற்றும் குழந்தையின் சடலத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுட்டுள்ளனர். அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றுயோரம், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளிலும் அடையாறு முகத்துவாரம் பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடினர். குழந்தையின் சடலம் அடையாறு மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரி­கி­றது. இந்­நி­லையில் கவுரவ் கொலை வழக்கு தொடர்­பாக பீகார் மாநி­லத்தைச் சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திர நாத் தாகூர், பிகாஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக போலீசார் தரப்பில் தெரி­வித்­துள்­ள­னர்.

Comments (0)
Add Comment