3,600 பள்ளி மாணவர்களுடன் ஆவடி கமிஷனரேட் செய்த உலக அதிசயம்

முதல்வர் ஸ்டாலின் போதையில்லா தமிழ் நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்திய

நிலையில் இன்று 05.02.2024 இதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ASIA BOOK OF RECORDS இணைந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை உருவாக்கும் “மாபெரும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஆவடி கமிஷனர் சங்கர் முன்னிலையில் தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,600 மாணவர்கள் கலந்துக் கொண்டு “எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை” என்பதை ஒன்றிணைந்து செயல் வடிவம் கொடுத்து செய்துக் காட்டினர். இது உலக சாதனை உருவாக்கும் நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் மாணவர்கள் டிஜிபி சங்கர்ஜிவால் முன்னிலையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வு உலக சாதனை உருவாக்கும் நிகழ்ச்சியாக ASIA BOOK OF RECORDS அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மாபெரும் போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை செயலாளர், திருவள்ளுர் மாவட்ட கூடுதல் ஆட்சியாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். ஆவடி காவல் ஆணையரக காவல் கூடுதல் ஆணையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆவடி காவல் ஆணையரக காவல் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Comments (0)
Add Comment