வீரதீர பரிசுப் பணத்தை பகிர்ந்து வழங்கிய காயல்பட்டினம் இளைஞருக்கு பாராட்டு விழா

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த வெள்ளத்தில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி அருகே சிக்கி தவித்த 253 பேரை காயல்பட்டினம், சிங்கித்துறை மீனவரான யாசர் அராபத் தலைமையிலான குழுவினர் படகு மூலம் மீட்டனர்.

இந்த வீரதீர செயலுக்காக யாசர் அராபத்துக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கி கவுரவித்தது. தனக்கு கிடைத்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசை தன்னுடன் மீட்புக்குழுவில் இணைந்து பணியாற்றிய சக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க யாசர் அராபத் முன்வந்தார். அது தொடர்பான பாராட்டு விழா காயல்பட்டினம் பேர்ல் கார்டன் ரிசார்ட் அரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனது பரிசுத்தொகையினை இளைஞர் யாசர்அராபத் மீட்புக்குழுவினருக்கு பகிர்ந்தளித்தார்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் மொய்தீன் தம்பிதுரை தலைமையில் நடந்த இந்த விழாவில் செயலாளர் வாவு சம்சுதீன், துணைச் செயலாளர் முகம்மது நவாஸ், அல்ஜாமிஉல் அஸ்கர் ஜூம்ஆ பள்ளியின் தலைவர் அபுல்ஹசன் கலாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்க மைய நிர்வாகி முஜாஹித் அலி இறைவணக்கம் பாடினார். காயல் ஜெஸ்முதீன் வரவேற்று பேசினார். முகம்மது ரபீக் அறிமுக உரை நிகழ்த்தினார்.

காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் அமானுல்லா, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாவட்ட தலைவர் சேக்னா லெப்பை, தொழிலதிபர் ராவன்னா அபுல் ஹசன், ஆறுமுகநேரி பார்த்திபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை பேர்ல் கார்டன் ரிசார்ட் மேலாண்மை இயக்குனர் அகமது மெய்தீன் தொகுத்து வழங்கினார்.அண்ணா பதக்கம் பெற்ற மீட்பு குழு பொறுப்பாளர் யாசர் அராபத் ஏற்புரை வழங்கினார்.

மருத்துவ அறக்கட்டளை செயலாளர் செய்யது அப்துல்காதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முகம்மது அலி,முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரபீக், மீனவ கூட்டுறவு சங்க தலைவர் ஜோசப்,கடற்கரை முகைதீன் பள்ளி தலைவர் அப்துல் ரகுமான், சமூக நல்லிணக்க மைய செயலாளர் அகமது ரியாஸ், சமூக ஆர்வலர்கள் மக்கி நூகு தம்பி,ஷேக்,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாவட்ட செய்தியாளர் முகம்மது சமீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment