பல கோடி மதிப்பில் பழங்கால கலைப்பொருட்கள் தருவதாக ரூ. 5 மோசடி செய்த 4 பேர் பிஸ்டலுடன் கைது

சென்னை, கோயம்பேட்டில் பழங்கால கலைப்பொருட்கள் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி லாட்ஜில் பதுங்கியிருந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவான்மியூர், பகுதியில் வசித்து வரும் நாகராஜன் (49). தனது நண்பர் மூலம் அறிமுகமான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிவா (எ) சூர்யா என்பவரிடம் பழைய கலைப்பொருட்களை வாங்கி வியாபாரம் செய்வதற்காக ரூ. 5 லட்சத்தை கடந்த 16.02.2023 அன்று கொடுத்துள்ளார். ஆனால் பேசிய படி சிவா பழங்கால கலைப்பொருட்களை கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் நாகராஜனை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிவா நேற்று (05.05.2023) இரவு சென்னை, கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கியுள்ளார். தகவலறிந்த நாகராஜன் தங்கும் விடுதிக்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, சிவா பணம் தர மறுப்பு தெரிவித்து நாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து நாகராஜன் K-11 CMBT காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

சிஎம்பிடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி தங்கும் விடுதியை கண்காணித்து சோதனை செய்து அங்கு பதுங்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சிவா @ சூர்யா, 38, கேரளாவைச் சேர்ந்த குபைப், 37, ஜித்து ஜெயன், 24, இர்ஷாத், 21, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 Pistol, 9 தோட்டாக்கள், கோபுர கலசத்திற்கு உபயோகிக்கக்கூடிய 3 செம்பு பொருட்கள், 6 செல்போன்கள், 1 டேப், 3 பழங்கால நாணயங்கள், 1 கைவிலங்கு, 1 லீடிங் செயின், 2 கண்ணாடிகள் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி 4 நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Comments (0)
Add Comment