சென்னை ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது. 5 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசித்து வரும் முனிருதின் என்பவர் பாரதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். 12.11.2024 அன்று கடையில் உள்ள பழைய தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் 5 கிராம் எடை கொண்ட 3 தங்க நாணயங்கள் மற்றும் 1 ஜோடி கம்மலை கொடுத்து புதிய நகைகளை வாங்கிச் சென்றதும், மேற்படி 5 கிராம் தங்க நகைகளை லாக்கரில் வைத்திருந்த நிலையில், அவை காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து முனிருதின் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜாம்பஜார் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும், தங்க நகைகளை திருடிய மேற்படி தங்க நகைகடையின் ஊழியர் திரு­வா­ரூரைச் சேர்ந்த முகமது பாசித் (25) தெரு, பூதமங்கலம் கிராமம், திருவாரூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிராம் எடை கொண்ட 3 தங்க நாணயங்கள் மற்றும் 1 ஜோடி கம்மல் ஆகியவை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது பாசித் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)
Add Comment