இளம்­பெண்ணின் அந்­த­ர­ங்க வீடி­யோவை வௌியி­டு­வ­தாக மிரட்டி பணம் பறித்த குமரி வாலிபர் கைது

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி, ஆன்லைனில் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிர­பல வாலிபரை தாம்­பரம் மத்­திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சைஜு என்ற 23 வயது வாலி­பர் என்பவர் அறி­மு­க­மா­கி­யுள்­ளார். பழக்கம் நாளாக நாளாக காத­லாக மாறவே, சைஜு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி­யுள்ளார். அத­னை­ய­டுத்து மதி மயங்கி பேசிய அந்தப் பெண்­ணிடம் அவரது அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்­பும்­படி சைஜு கேட்­டுள்ளார்.

கண­வ­ராகப் போகி­றவர் என்­கிற நம்­பிக்­கையில் அந்தப் பெண்ணும் தனது அந்­த­ரங்க வீடி­யோவை வாலிபர் சைஜுக்கு அனுப்­பி­யுள்ளார். இந்­நி­லை­யில் அப்பெண்ணின் அந்தரங்கப் புகைப் படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி வாலிபர் சைஜு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். மானத்­துக்குப் பயந்து அந்தப் பெண் ரூ. 1,60,000 ஆயிரம் வரை அனுப்­பி­யுள்­ளார். இந்­நி­லையில் சைஜு மேலும் லட்­சக்­க­ணக்கில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்தால் அந்தரங்க வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன் கூறி சைஜு மிரட்டியுள்ளார்.

அத­னை­ய­­டுத்து அந்தப் பெண் இது குறித்து தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்­ராஜை சந்­தித்து புகார் மனு அளித்­தார். அவ­ரது உத்­த­ரவின் பேரில் தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை செய்­தனர். அத­னை­ய­டுத்­து மிரட்டல் விடுத்த வாலிபர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்­தவர் என்றும் இன்ஸ்­­டா­கி­ரா­மில் பைக் பந்தயம் (Bike Race) தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு ஆயிரக்கணக்கான பின் தொடர்பவர்களைக் (Followers) கொண்ட “பிரபலம்” என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 செல்போன்களை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்ட பெண் மட்டுமின்றி, மேலும் பல பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்தது தெரியவந்ததையடுத்து, சைஜு மீது தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்­படை மார்த்­தாண்டம் சென்று சைஜுவை கைது செய்­தனர். அவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்­த­னர்.

கமி­ஷனர் அறி­வு­ரை

பொதுமக்கள் செல்போன் பயன்படுத்தும் போது மிகுந்த விழிப்புணர்வுடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களையோ, புகைப்படங்களையோ பகிர வேண்டாம் கமி­ஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment