அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (2.11.2023) மதியம், சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி வணிக வளாகத்தில் உள்ள அறையில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சாலிகிராமம், ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட எதிரி செந்தில்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (21.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment