ரூ.  2.25 லட்சம் மதிப்­புள்ள போலி ஐபோன் உதி­ரி­பா­கங்கள் விற்­பனை செய்த கும்பல் கைது

தமி­ழக அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­து­றை­யினர் நெல்­லையில் நடத்­திய அதிரடி ரெய்டில் ரூ. 2,24,500 மதிப்புள்ள போலி ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்­துள்­ள­னர்.

நெல்­லையில், ஆப்பிள் ஐ போன் உதிரிபாகங்கள் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக குமரவேல் என்பவர் திரு­­நெல்­வேலி அறி­வுசார் சொத்­து­ரிமை அ­ம­லாக்­கப்­பி­ரிவு காவல் ­து­றையில் ஒரு புகார் மனு அளித்தார். அம­லாக்கம், குற்­றப்­பு­ல­னாய்வுப்பிரிவு ஏடி­ஜிபி அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி அருண் பால­கோ­பாலன் மேற்­பார்­வையில் நெல்லை அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­து­றை­யினர் போலீசார் விசா­ரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தனிப்­ப­டை­யி­னர் தூத்துக்குடி ஜங்ஷன் பகுதியில் உள்ள Banu & Brothers Mobiles, Kani Mobiles, Mahalakshmi Mobiles um Rama Mobile spares கடைகளில் அதி­ரடி சோதனை நடத்தினர். ­அந்தச் சோதனையின் போது தூத்துக்குடியைச் சேர்ந்த சம்சுதீன், கனி, ராம்பிரகாஷ், ஹரீஹரம் ஆகியோர் போலி ஆப்பிள் ஐ போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது. அத­னை­ய­டு­த்து நால்­வரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் ரூ. 2,24,500 மதிப்புள்ள போலி தயாரிப்புக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கபிரிவு திருநெல்வேலியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது. அதி­ர­டி­யாக ஆய்வு நடத்தி போலி­யான ஐபோன் உதி­ரி­பா­கங்­களை பறி­மு­தல் செய்த தனிப்­ப­டை­யினரை ஏடி­ஜிபி அபின் தினேஷ் மோடாக், ஐஜி செந்தில்குமாரி ஆகியோர் வெகுவாகப் பாராட்­டி­னர்.

போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-2851 1587 என்ற தொலைபேசி எண்ணிலோ வழங்குமாறு அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­து­றை­யினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்­ள­னர்­.

Comments (0)
Add Comment