காயாமொழியில் 96வது ஆண்டு புஹாரி ஷரீப் அபூர்வ துவா நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் 96வது வருட புஹாரி ஷெரிப் அபூர்வ துஆ நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் முஹிய்யித்தீன் ஆண்டகை ஜும்மா பள்ளியில் 96வது வருட புஹாரி ஷரீப் அபூர்வ துஆ நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 30 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாள் சுபுஹு தொழுகைக்கு பிறகும் புகாரி விளக்கவுரை நடந்தது. இந்தப்புனித நிகழ்ச்சிக்கு பள்ளிவாசலின் தலைவர் அபூஸாலிஹ், செயலாளர் கிதுரு இமாமுதீன், பொருளாளர் கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 7ம் தேதியன்று நடந்த நிறைவு நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணி அளவில் புகாரி ஷரீப் அபூர்வ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது. காயல்பட்டினம் மௌலவி அல்ஹாபில் சுலைமான் லெப்பை மஹ்லரி அல்ஹு ரைர் கேம்ப் (துபாய் -இமாம் ) அவர்கள் பிரார்த்தனை நிகழ்ச்சியில் துஆ செய்தார்கள். இந்த பிராத்தனையில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நாட்டில் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் தலைத் தோங்கிடவும், நாட்டில் வறுமை நீங்கி, செழிமை நிலத்திடவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மௌலவி ஹபீப் ரஹ்மான் ஆலிம், மௌலவி காஜா முஹிய்யித்தீன் ஆலிம், மௌலவி வஜ்ஹுத்தீன் ஆலிம், மௌலவி சுல்தான் அலாவுதீன் அஸ்ஹரி, காயல் ஜெஸ்முதீன், இறையருள் யூசுப், மௌலவி முஹம்மது திஹ்யத்துல் களபி மற்றும் ஏராளமான பெண்களும், ஆண்கள் உள்பட சுமார் 1,000 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வுக்கு புகாரி சிறப்பு கமிட்டினர் மற்றும் நிர்வாகிகள் முன்நின்று களப் பணியாற்றினார்கள். இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சோறு நேமிதம் வழங்கப்பட்டது.

Comments (0)
Add Comment