சென்னை திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 16.02.2024 பெரியமேடு, மூர் மார்கெட் அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக் தீபக் (24) முதல் காலனி தெரு, கோயம்புத்தூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (16.02.2024) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வடபழனி பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பிரிடோஸ் ரியாஸ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (16.02.2024) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, திரு.வி.க பள்ளி மைதானம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பாபா பிரகாஷ் (எ) பிரகாஷ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (16.02.2024) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, மூலக்கடை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த செங்குன்றம், மாதவன், (30), கலைச்செல்வன் (எ) அப்பு (34), தினேஷ்குமார் (32) சையது முஷராப் (23) சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் 7 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.