7 நாள் ­ந­டத்­திய அதி­ரடி சோத­னையில் சென்னை நகரில் 567 கிலோ குட்கா, மாவா சிக்­கி­யது: 78 பேர் கைது: சென்னை பெரு­ந­கர காவல்­துறை அதி­ர­டி

சென்னை பெரு­ந­கரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 நபர்கள் கைது. 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 20.01 கிலோ மாவா, மற்றும் 66 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன.
சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13.03.2024 முதல் 19.03.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78  நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிட மிருந்து 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 20.01 கிலோ மாவா, 6 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள், 1 செல்போன், பணம் ரூ.56,220/-, 2 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும்                  1  லகுரக வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Comments (0)
Add Comment