தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் ரஹ்மத்துன்- லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 41 ஆண்டு விழா மற்றும் நபிகள் நாயகத்தின் உதய தின மீலாது நபி பெருவிழா 2 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல் நடந்தது.
பின்னர் அகமது நெய்னார் பள்ளி இமாம் உமர் அப்துல் காதிர் தலைமையில் நபிகள் புகழ் பாடும் மவுலிது மஜ்லிஸ் நடந்தது. மாலையில் மாணவர்களுக்கான சன்மார்க்க பேச்சு திறனாய்வுப் போட்டியும், பின்னர் புனித புர்தா பாடல்கள் பாடப்பாட்டன. இந்நிகழ்ச்சிக்கு முகைதீன் பள்ளி இமாம் செய்யது அகமது முத்துவாப்பா தலைமை தாங்கினார். முகம்மது முகைதீன், முகம்மது பாசின் ஆகியோர் முன்னிலையில் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் முகம்மது அன்வரி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக செய்கு ஹல்ஜி இறைவணக்கம் பாடினார். 2-வது நாள் நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 5 பிள்ளைகளுக்கு சுன்னத் விருத்தே சனம் நிகழ்ச்சி நடை பெற்றதுபின்னர் மாணவர்களின் திருக்குர்ஆன் ஒப்புவித்தல் நடந்தது.
இந்த நிகழ்வின் நடுவர்களாக நஹ்வி முஹம்மது மெய்தீன், ஹாபிழ் ஈஷா சபிக், ஆலிம் சதக்கதுல்லாஹ் கைரி ஆகியோர் பங்கேற்றார்கள். ஜவாஹிர், முகம்மது சலீம் ஆகியோர் முன்னிலையில் சிறிய குத்பா பள்ளியின் கதீபு முகம்மது முகைதீன், கம்பம் ரவ்லத்துல் ஜன்னா மத்ரஸதுந் நிஸ்வான் அரபிக் கல்லூரி பேராசிரியர் பீர் முகம்மது சதக்கி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக பரிசளிப்பு நடந்தது. ஜாஸ்மின் கலீல், ஜவாஹிர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார். செய்யது மீரான் முஜ்ஜமில் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மௌலவி அபுதாஹிர் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மோக்கா சுல்தான், தோல்சாப் முஹிய் யிதீன் அப்துல் காதர், தோல்சாப் சம்சுதீன்,சாலிஹ்,ஜெஸ்முதீன்,முகம்மது சமீம் உள்பட பலர் செய்திருந்தனர்.