ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் 3 புதிய புறக்­காவல் நிலை­யங்கள்: கமி­ஷனர் சங்கர் திறந்து வவத்­தார்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 3 புறக்­கா­வல நிலை­யங்களை கமி­ஷனர் சங்கர் திறந்து வைத்­தார்.

ஆவடி காவல் ஆணை­ய­ரத்­துக்­குட்­பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல் துறையினரை பொதுமக்கள் எந்நேரத்திலும் அணுகக்கூடிய வகையில் சிறப்பு ஏற்­பா­டு­களை கமி­ஷனர் சங்கர் செய்து வரு­கி­றார்.

அதன் தொடர்ச்­சி­யாக ஆ­வடி காவல் ஆணை­ய­ர­கத்தில் இன்று, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசிஎல் காலனி, கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாட்டர் கனல் சாலை பகுதி, புதூர் சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரி பகுதி என 3 இடங்­களில் புறக்­காவல் நிலை­யங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்து இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் புறக்காவல் நிலையத்தில் அலுவலில் நியமிக்கப்படுவார்கள். புறக்காவல் நிலையத்தில் பெறப்படும் மனுக்களுக்கு மனு ரசீது (CSR) வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். 24 மணி நேரமும் புறக்காவல் நிலையம் செயல்படும், புறக்காவல் நிலையத்தில் வரவேற்பு பணியில் உள்ள காவலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள். இன்று நடந்த நிகழ்வில் ஆவடி காவல் ஆணை­யர கூடுதல் கமி­ஷனர் பவா­னீஸ்­வரி மற்­றும் துணைக்­க­மி­ஷ­னர்கள், உத­விக்­க­மி­ஷ­னர்கள், காவல் ஆளி­னர்கள் கலந்து கொண்­ட­னர்.

Comments (0)
Add Comment