சென்னை அய­னா­வ­ரத்தில் 24 கிலோ குட்கா பாக்­கெட்­டுக்கள் பறி­முதல்: இருவர் கைது

சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்­து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­த­னர்.

அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 18.03.2025 அன்று காலை, அயனாவரம், சபாபதி தெருவில் ரக­சி­ய­மாக கண்காணித்தனர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த ராம்பாபு (39) என்பவரை கைது செய்தனர். ராம்பாபு அளித்த தகவலின்பேரில், அவருக்கு குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விநியோகம் செய்த வில்­லி­வா­க்­கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்­­ப­வ­ரையும் மடக்கிப் பிடித்­தனர். இருவரிடமிருந்தும் மொத்தம் 24.35 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், V1, விமல், கூலிப் ஆகிய குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இரு­வரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment