திருச்­சியில் கோலா­க­ல­மாக நடந்த 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி:

திரு­ச்­சியில் 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி நடை­பெற்­றது. இதில் வெற்றி பெற்­ற­வர்­க­­­ளுக்கு மாவட்ட ஆட்­சித்­த­லைவர் மற்றும் தமிழ்­நாடு ஒலிம்பிக் அசோசி­யேஷன் துணைத் தலை­வரும், மாநில ஹேண்ட்பால் அசோ­­சி­யே­ஷன் தலை­­வமான முன்னாள் போலீஸ் ஐஜி ராம­சுப்­பி­ர­மணி, ஐபிஎஸ் ஆகி­யோர் பரி­சுகள் வழங்கினர்.

திருச்­சியில் 2024ஆம் ஆண்­டு முதல்வர் கோப்­பைக்­கான ஹேண்ட்பால் போட்டி கடந்த 6.10.2024 தொடங்கி 15.10.2024 வரை நடந்தது. எஸ்டிஏடி அதிகாரிகளுட­ன், மாநில ஹேண்ட்பால் அசோ­­சி­யேஷன் தலை­வரும் மற்றும் தமிழ்­நா­டு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவரும், தமி­ழக காவல்­துறை முன்னாள் போலீஸ் ஐஜி­யு­மான ராம­சுப்­பி­ர­மணி மற்றும் மாநில செயலாளர் சிவகுமார், திருச்சி அண்ணாவி ஆகியோர் இணைந்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி இந்த போட்­டிகள் நட­த்தப்பட்டன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 10 நாட்கள் நடத்தப்பட்ட இந்த மெகா விளை­யாட்டுப் போட்­டியில் ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ. 10.5 லட்சம், ரூ. 7 லட்சம், மற்றும் ரூ. 3.5 லட்சம் என ஒவ்வொரு அணிக்கும் (14 வீரர்கள்) முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களுக்கு வழங்கபட்டது. மேலும் நான்கு பிரிவுகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 84 லட்சம் ஆகும்.

மாணவ, மாண­வி­களை சாத­னை­யா­ளர்­க­ளாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்­வையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆகியோர் வழி­காட்­டு­தலின் பேரில் நடந்த இந்தப் போட்­டியை அமைச்சர் கே.என். நேரு துவங்கி வைத்தார். மாநில விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணை­யத்தின் ஒருங்­கி­ணைப்புடன் 160 போட்டிகள் நடத்தி வெற்றிகள் தீர்மானிக்கபட்டன.

­இதில் வெற்றி பெற்­றவர்­க­ளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் ஐஏஎஸ் மற்றும் தமிழ்­நாடு ஒலிம்பிக் அசோசி­யேஷன் துணைத் தலை­வரும், மாநில ஹேண்ட்பால் அசோ­­சி­யே­ஷன் தலை­­வரும், முன்­னா­ள் போலீஸ் ஐஜி­­யு­மான ராம­சுப்­பி­ர­மணி, ஐபிஎஸ், ஆகியோர் ரொக்கப்­ப­ரிசு மற்றும் விரு­துகள் வழங்கி பாராட்­டினர். இப்போட்டிகள் மாணவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளதாக பங்­கேற்­பா­ளர்கள் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment