சென்னை ஏழுகிணறு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேர் கைது

221

சென்னை, ஏழுகிணறு பகுதியில் டாடாஏஸ் இலகுரக சரக்கு வாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொண்டிதோப்பு, காஞ்சிபுரம் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கோபால்ராம், (வயது 29). கடந்த 25.06.2023 அன்று மதியம், தனது டாடாஏஸ் லகு ரக சரக்கு வாகனத்தை வழக்கமாக நிறுத்தும் ஏழுகிணறு, வடக்குவால் ரோடு அருகில் நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் (26.06.2023) அன்று மதியம் பார்த்த போது, அவரது டாடாஏஸ் சரக்கு வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோபால்ராம், 3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து டாடாஏஸ் வாகனத்தை ஆலந்தூரைச் சேர்ந்த ஸ்டாலின் (எ) ரெய்டர், 22, மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், 27 ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து டாடா ஏஸ் லகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் சேர்ந்து டாடா ஏஸ் வாகனத்தை திருடி அதன் பதிவு எண்ணை மாற்றி பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் ஸ்டாலின் (எ) ரெய்டர் மீது, திருட்டு, வழிப்பறி என 2 குற்ற வழக்குகளும், கோகுல் மீது 6 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், நேற்று (08.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.